திருத்தணியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து
ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஆந்திரா, தெலுங்கான, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் திருத்தணி மலையாடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இன்று சாமி தரிசனம் செய்ய இருந்தனர். இந்த நிலையில் அங்குள்ள குமரன் விடுதியில் தீவிபத்தானது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அரக்கோணம், திருத்தணி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தீயை அனைத்தனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த ஆவணங்கள், மெத்தைகள் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்து அதிகாலையில் ஏற்பட்டதால், தூங்கிகொண்டிருந்த பக்தகர்களை அப்புரப்படுத்தும் வகையில் விடுதி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.