தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்களின்படி 2026 முதல் எப்ஐஆருக்கு 3 ஆண்டுக்குள் தீர்வு: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தகவல்

டெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம், பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து வைக்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. நீதி வழங்கும் முறையை நவீனமயமாக்கவும், குடிமக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையில் அரியானாவின் குருக்ஷேத்ராவில் இந்த புதிய சட்டங்கள் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘வரும் 2026ம் ஆண்டு முதல், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) சராசரியாக மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து வைக்கப்பட்டு, நீதி உறுதி செய்யப்படும். இனிமேல் நீதிமன்றங்களில் வாய்தா மேல் வாய்தா வாங்கும் நிலை இருக்காது. இந்த நடவடிக்கை, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைக் குறைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறித்த காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும்’ என்றார்.

Advertisement

Related News