செங்கல்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: சப்-கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
இதில், சப்-கலெக்டர் நாராயண சர்மா பேசுகையில், ‘செங்கல்பட்டு நகரம் காட்டாங்கொளத்தூர் ஊரக பகுதி, திருப்போரூர் ஊரக பகுதி, திருக்கழுக்குன்றம் ஊரக பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கும். போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும், மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாடு வளர்ப்போர் தங்கள் இல்லங்களிலேயே பாதுகாப்பான முறையில் மாடுகளை வளர்த்துகொள்ளலாம். இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Advertisement