2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.16) கடைசி நாள்
டெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று(செப்டம்பர்.16) கடைசி நாள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் இன்று ஒரு நாள் வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும்.
2025-26 ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல் செய்யும் அவகாசத்தை ஜூலை 31ம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை கடந்த மே மாதம் அறிவித்தது. நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் இன்று ஒரு நாள் வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இந்த கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; "ஜூலை 31, 2025 வரை தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை CBDT மேலும் நீட்டித்துள்ளது (ஏற்கனவே செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது).
2025-26 ஆம் ஆண்டுக்கான இந்த வருமான வரி அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 15, 2025 முதல் செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது.