காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுக்கு நிதி உதவி; கனடா அரசு ஒப்புதல்
ஒட்டாவா: கனடாவில் இருந்து இரண்டு காலிஸ்தானி பிரிவினைவாத குழுக்கள் நிதியுதவி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாத நிதியுதவி குறித்த கனடா அரசின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியுதவி அபாயங்களின் 2025 மதிப்பீடு என்ற தலைப்பில் இந்த அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கனடாவில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பல தீவிரவாத நிறுவனங்கள், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் காலிஸ்தானி பிரிவினைவாத குழுக்களான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்டவை கனடாவில் இருந்து நிதியுதவிகளை பெறுவது சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக உந்துதல் பெற்ற வன்முறை தீவிரவாதமானது புதிய அரசியல் அமைப்புக்களை நிறுவுவதற்கு வன்முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது அல்லது ஏற்கனவே உள்ள அமைப்புகளுக்குள் புதிய கட்டமைப்புகள் மற்றும் விதிமுறைகளை ஊக்குவிக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.