நிதி ஆணைய அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
Advertisement
புதுடெல்லி: நிதி ஆணையம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறுவப்பட்ட அரசியலமைப்பு ரீதியான அமைப்பாகும். கடந்த 2023 டிசம்பரில் 16வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. 16வது நிதி ஆணையத்தின் பதவிக் காலத்தை நவம்பர் 30 வரை ஒரு மாதம் நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அரவிந்த் பனாகரியா தலைமையிலான நிதி ஆணையம் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தது. வரிகளின் நிகர வருமானத்தை ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையில் பகிர்ந்து கொள்வது குறித்தும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Advertisement