திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி தொழிலாளர்கள் யூனியனுக்கும் இடையே சமரசம்..!!
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி தொழிலாளர்கள் யூனியனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கு இடையே சமரசம் ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருதரப்பும் தகவல் தெரிவித்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் மத்தியஸ்தம் செய்ததில் இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் எடுக்கும் படத்தில் பணியாற்றக்கூடாது என பெப்சி அறிவித்திருந்தது. பெப்சி யூனியன் அறிவிப்பை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement