தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிப் பருவத்தில் தாக்கியதாகப் புகார்; நடிகையிடம் ரூ.59 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு: தென்கொரியா திரும்பிய நபரால் பரபரப்பு

சியோல்: பிரபல தென்கொரிய நடிகை சாங் ஹா-யூன் மீதான பள்ளிப் பருவ கொடுமைப்படுத்துதல் புகார் விவகாரம், புகார்தாரரின் திடீர் வருகையால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் ‘மேரி மை ஹஸ்பண்ட்’ என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் தென்கொரிய நடிகை சாங் ஹா-யூன் (38). இவர் மீது, 20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, தன்னை 90 நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கியதாக ஓ என்ற புகார்தாரர் கடந்த ஆண்டு குற்றம்சாட்டினார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சாங் ஹா-யூன் முற்றிலுமாக மறுத்ததுடன், ஓ என்பவரை எனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

Advertisement

மேலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக ஓ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அமெரிக்காவில் வசித்து வந்த ஓ, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து தென்கொரியா திரும்பியுள்ள புகார்தாரர் ஓ, நடிகை சாங் ஹா-யூன் மீது 10 பில்லியன் வோன் (இந்திய மதிப்பில் சுமார் 59 கோடி ரூபாய்) நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரத்தை கண்ணியமான முறையில் தீர்க்க வழிவகை செய்தேன்; ஆனால் ஏற்கப்படவில்லை. இனிமேல் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து புகார் அளிப்பேன்.

எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சர்வதேச அளவில் ஏற்பட்ட அவதூறு, தவறான குற்றவியல் நடவடிக்கைகள், சமூக வாழ்வாதார இழப்பு போன்றவற்றுக்காக நடிகையிடம் 10 பில்லியன் வோன் நஷ்டஈடு கோரியுள்ளேன்’ ஓ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாலும், நடிகை தரப்பும் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாலும் இந்த விவகாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News