புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்வு ஆக.5ம் தேதி முதல் பிஜி, நியூசிலாந்து, திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதலில் பிஜி செல்லும் ஜனாதிபதி முர்மு, அந்த நாட்டு ஜனாதிபதி கட்டோனிவேர்,பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து பேசுவார். அதை தொடர்ந்து பிஜி நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். அதை தொடர்ந்து ஆக 7 முதல் 9 வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதை தொடர்ந்து திமோர் லெஸ்டே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 10ம் தேதி அங்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.