பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணிக்கு 133வது இடம்: 9 ஆண்டில் இல்லாத சரிவு
Advertisement
இதன் காரணமாகவே 2027ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதில் பெரும் சிக்கலையும் சந்தித்துள்ளது. நட்சத்திர வீரர் சுனில்சேத்ரி கடந்தாண்டு ஓய்வை அறிவித்து விட்டு, பின்னர் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார். ஆனாலும் தொடர் தோல்வியால், தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் சமீபத்தில் வெளியேறியுள்ளார். 1996ம் ஆண்டு 95வது இடம் பிடித்ததே இந்தியாவின் சிறந்த இடமாகும். இந்த பிபா தரவரிசை பட்டியலில் அர்ஜென்டினா முதலிடத்தையும், ஸ்பெயின் 2ம் இடத்தையும், பிரான்ஸ் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. 4 முதல் 10வது வது இடத்தை முறையே இங்கிலாந்து, பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, குரேசியா பெற்றுள்ளது.
Advertisement