பெண் குரலில் பேசி 17 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவர் கைது
Advertisement
இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை. சம்பவத்தன்று பள்ளி மாணவி வீட்டை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு வந்து வாசலில் காத்திருந்தார். இதை மாணவியின் தந்தை பார்த்து விட்டார். ஜூனைத்திடம் சென்று இங்கு ஏன் இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்லாமல் ஓட முயன்றார். ஆனால், மடக்கி பிடிக்க முயன்ற போது ஜூனைத்தின் செல்போன் தவறி கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்த போது ஜூனைத், பல இளம்பெண்களிடம் ஸ்னாப் ஷாட் மூலமாக பேசி பழகி வந்ததும், காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. சில மாணவிகளை அவர் காதலிப்பது போல் நடித்துள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து ஜூனைத்தை கைது செய்தனர்.
Advertisement