தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘உன் உயிர் என் கையில் தான்’ பெண் போலீசுக்கு எஸ்ஐ கொலை மிரட்டல்: ஆடியோ வைரல்; இருவரும் சஸ்பெண்ட்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்ஐயாக இருந்தவர் செல்வகுமார் (36). அதே பிரிவில் இந்திராகாந்தி (32) என்பவர் காவலராக இருந்தார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர். இப்பிரச்னை வெளியே தெரிந்ததால் எஸ்ஐ செல்வகுமார் திருச்செந்தூருக்கும், காவலர் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement

இதற்கிடையே, இந்திராகாந்தியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு செல்வகுமார் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் எஸ்ஐ செல்வகுமார், ‘நீ என் வேலையை எல்லாம் கெடுத்து விட்டாய், உன் பிள்ளைகளை நீ பத்திரமாய் பார்த்துக்கொள். எனக்கு எப்போது வேண்டுமானாலும் கிறுக்கு பிடித்து விடும். நேற்றிரவே உன்னை முடித்திருப்பேன். நூலிழையில் தப்பி விட்டாய்.

உச்சக்கட்ட கொலை வெறியில் இருந்தேன். நேற்றே உன்னை முடித்திருப்பேன். இன்றைக்கு உன்னை அடக்கம் செய்து இருப்பார்கள். என்றைக்கு இருந்தாலும் உன் உயிர் என் கையில் தான்’ என்றார். அதற்கு பதிலளித்து பெண் காவலர் இந்திராகாந்தி, ‘உன் பேமிலி தூத்துக்குடியில் தான் உள்ளது. கோவில்பட்டிக்கும் திருச்செந்தூருக்கும் எவ்வளவு தூரம். உனக்கு மட்டும் தான் பனிஸ்மென்ட் கிடைத்திருக்கிறதா, எனக்கும் தான். நான் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன்’ என்றார்.

அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வசைமாறி பொழிந்து விட்டு செல்போனை வைத்து விடுகின்றனர். இந்த ஆடியோ வைரலானதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் இந்திராகாந்தி புகார் அளித்தார். அதன்படி எஸ்ஐ மீது 4 பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, போக்குவரத்து எஸ்ஐ செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, காவல்துறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக பெண் காவலர் இந்திராகாந்தியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

Advertisement