Home/செய்திகள்/Female Lawyer Sexual Harassment Hindu Peoples Organization State Vice President Arrested
பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லை: அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது
10:43 AM Jan 28, 2025 IST
Share
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் சுந்தரம் என்ற மாயாஜி (47) கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே உள்ளார். தற்போது இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.