தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தை, மகன் மோதலில் பலிகடாவாக கூடாதென அடக்கி வாசிக்கும் மூத்த நிர்வாகிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சாட்டையை சுழற்ற தயாரா இருக்கும் மாங்கனி ஆபீசரால் மாமூல் அதிகாரிங்க பீதியில் உறைந்திருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர காக்கிகள் பங்கு கிடைக்காத விரக்தியில் இருக்காங்களாம்.. இங்குள்ள எக்கு பெயரை கொண்ட ஸ்டேசனில் சின்ன இன்ஸ்பெக்டர் என்ற பொறுப்பை சுமந்துக்கிட்டு ஒரு சிறப்பு எஸ்.ஐ. இருக்காங்களாம்... ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அந்த சின்ன இன்ஸ்பெக்டரிடம்தான் இருக்குதாம்.. ஓடி ஆடி வேலை செய்யும் அவரை சின்ன இன்ஸ்பெக்டர் என்றே சக காக்கிகள் அழைக்கிறாங்களாம்...

Advertisement

இதனை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு சுறுசுறுப்புடன் அந்த சிறப்பு எஸ்.ஐ. வேலை செய்றாராம்.. ஸ்டேசனை சுற்றிக்கிடக்கும் உடைந்துபோன வண்டிகளை தைரியமா வியாபாரம் செய்வாங்களாம்... அதே நேரத்தில் கிம்பளம் கிடைக்கும் கோயில் விழா பாதுகாப்புக்கு செல்வது போன்ற வருவாய் கிடைக்கும் பணியை மட்டும் செய்வதுடன், யாருக்கும் முறையாக பிரித்து கொடுக்காமல் தனி ராஜ்ஜியம் செய்றாராம்...

இதனால் ரொம்பவே அதிருப்தியில இருக்காங்களாம் காக்கிகள்.. அப்படியே கன்னம் ஸ்டேசன் பகுதிக்கு வந்தால் அந்திசாயும் நேரத்தில் அதிகாரி ஒருவரின் கணவர் ஸ்டேசனில் காத்திருக்குமாம் கொக்கு என்பது போல அப்பாவியா இருப்பாராம்.. அவரை ஒரு அதிகாரியாகவே பொதுமக்கள் பாக்குறாங்களாம்.. ஏதாவது டீல் முடிந்தது என்றால் வண்டியை எடுத்துக்கிட்டு தூரத்தில் நிற்பாராம்... வாங்குவதை வாங்கிக்கொண்டு செல்வாராம்.. மனைவி உத்தரவை கேட்டு செயல்படும் நல்ல கணவருன்னு காக்கிகள் சொல்றாங்க..

அப்படியே அம்மா ஸ்டேசனுக்கு வந்தால் காக்கிகளின் சோகம் மனசு முழுவதும் ஏறிக்கொள்கிறதாம்... சமீபத்துல மாமூலாக ஒரு நபரிடம் இருந்து மட்டும் நாலு எல் வந்ததாக சொல்றாங்க.. அந்த மொத்த அமவுண்டும் ஐந்து பேருக்கு மட்டும் பிரிந்து போச்சாம்.. இந்த காட்சிகளை நேரடியாக பார்த்த காக்கிகளுக்கு எதுவுமே வந்து சேரலையாம்.. அதுவும் பெரும் தொகை என்பதால் என்ன செய்வது என தெரியாம திணறுறாங்களாம்.. இந்த விவகாரங்கள் உளவுத்துறை மூலமா உயரதிகாரிகளின் காதுக்கு சென்றிருக்காம்.. புதிதாக வந்துள்ள அந்த அதிகாரி ரொம்பவும் கோவக்காரராம்..

இதற்காக அவரது பக்கத்திலேயே சாட்டையை எடுத்து வச்சியிருக்காராம்.. அவரது செவிக்கு விவகாரம் சென்றால் என்னாகுமோ என்ற பீதி மாமூல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘யூனியனான புதுச்சேரியில் இலையுடன் கூட்டணி முடிவாக வில்லை என்ற மலராத கட்சியின் அறிவிப்பில் தந்திரம் இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் மலராத கட்சியுடன் இலைகட்சி ஓரணியாகி பிரசாரத்தையும் தொடங்கி விட்டது.. முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நிலவினாலும் எல்லாம் மேலே இருக்கிறவன் கடைசியில் பார்த்துக் கொள்வான் என மலராத கட்சி தரப்பு உற்சாகத்தில் இருக்கிறதாம்...

காரணம், மாங்கனியையும் உள்ளே இழுக்க மறுபுறம் முயற்சிகள் நடக்கிறதாம்.. ஆனால் தமிழகத்தை ஒட்டிய யூனியான புதுச்சேரியில் இலையுடன் கூட்டணி முடிவாகவில்லை என தாமரை மேலிட நிர்வாகி தடாலடியாக கூறி உள்ளாராம்.. கடந்த தேர்தலில் இலைக்கு கிடைக்க வேண்டிய சீட்டுகளை பறித்த மலராத கட்சி தற்போதும் கூடுதலாக நிற்க முடிவெடுத்து இருக்கிறதாம்... புல்லட்சாமியை கடைசிவரை நம்பியிருந்த இலையோ ஏமாற்றத்திலும், வேறு வழியில்லாமல் கூட்டணியில் தொடர்ந்ததாம்..

வரும் தேர்தலுக்கான வேட்பாளர்களை இப்போதே தொகுதி வாரியாக மலராத கட்சி தேர்வு செய்து வருகிறதாம்.. இதன் பிரதிபலிப்புதான் இலையுடன் கூட்டணி முடிவாகவில்லை என்ற அறிவிப்பாம்.. இது இலை மற்றும் பிற கட்சிகளின் அதிருப்தி விஐபிக்களை வளைப்பதற்கான உள்ளடி தந்திரமாம்.. இதன் நகர்வுகளை எதிர்தரப்பும் உன்னிப்பாக கவனித்து வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரண்டில் ஒன்று நிச்சயம் என உற்சாகமாக இருக்கிறாராமே சர்ச்சைக்கு பெயர்போன மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயரைக் கொண்ட நதி மாவட்டத்தைச் சேர்ந்த மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளரான சர்ச்சைக்கு பெயர் போனவர் தற்போது ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ளாராம்.. தேர்தல் அரசியல் அவருக்கு அவ்வளவாக கைகொடுக்காத நிலையில் தோல்வி மட்டும் தான் மிஞ்சியது. கட்சியில் தனக்கு எதுவும் முக்கிய பதவிகள் கைகூடாத நிலையில், ஒன்றிய அரசில் ஏதாவது வாரியம் உள்ளிட்ட பதவிகளாவது கிடைக்கும் என காத்திருந்தது தான் மிச்சம். மாஜி போலீஸ்காரருக்கு பிறகாவது மாநில பதவி கிடைக்கும் என காத்திருந்து அதிலும் இலவு காத்த கிளியின் கதைதான் ஏற்பட்டது.

இதனால், மிகுந்த வருத்தத்தில் இருந்த மாஜி தேசிய செயலாளர் மீண்டும் உற்சாக மன நிலைக்கு வந்துள்ளாராம்.. காரணம் என்னவென கேட்டால் அடுத்து தனக்கு தான் கவர்னர் பதவி என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.. மகாராஷ்டிரா கவர்னராக இருந்த கோவைக்காரர் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாலும், நாகாலாந்து கவர்னராக இருந்தவர் இறந்ததாலும் தனக்கு இரண்டில் ஒன்று நிச்சயம் என உற்சாகமாக கூறிவருகிறாராம்..

இவரோடு பேட்ஜ்மேட் எல்லாரும் உயர்பதவிகளுக்கு சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, அடுத்த ரவுண்டிற்கு தயாராகி வரும் நிலையில், மாஜி தேசிய செயலாளரோ இப்போதான் முதல் ரவுண்டிற்கே தயாராகி வருகிறார் என அவரது ஆதரவாளர்களே முணுமுணுக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா ‘‘தந்தையையும், மகனையும் நம்பி வார்த்தைகளை விட வேண்டாம் என அடக்கி வாசிக்கிறாங்களாமே மூத்த நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி கட்சியில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்.. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழு 31ம் தேதி வரை கெடு விதித்திருக்காம்.. விளக்க நோட்டீஸ் எல்லாமே சட்டப்படி தான் நடக்குதாம்.. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தான் மிகவும் துல்லியமாக வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசை தயாரிக்கிறாராம்.. எதுவாக இருந்தாலும் சட்டத்தின்படி சென்றால் வென்றுவிடலாம் என நினைக்கிறாராம் தந்தை.

ஆனால் எந்த நோட்டீசுக்கும் எப்போதும் பதில் அளிக்கப்போவதில்லை என மகன் முடிவு செஞ்சியிருக்காராம்.. அப்படி ஒரு நிலை வரும்போது ரெண்டாவது கெடு மனுவை அனுப்பவும் திட்டமிட்டிருக்காராம் தந்தை. ஊமை ஜனங்களுக்காக பாடுபட்டு வரும் தந்தையை அடியோடு புறந்தள்ளியது மட்டுமல்லாமல் அவரது பேச்சை ஒட்டுக்கேட்கும் கருவியை வச்சி வேவு பார்த்ததை தந்தையால் இன்னுமே பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பாட்டாளிகள் சொல்றாங்க.. அதே நேரத்தில் மகன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தந்தைக்கு பாசம் தடுக்குதாம்.. இதனால் தான் ரொம்பவுமே பொறுமையா இருக்காராம்..

இதன் காரணமாகத்தான் அம்பை ஏவியவரை விட்டுவிட்டு அம்பு மீது கோபம் கொள்வது போல, ஒட்டுகேட்பு கருவியை பொருத்த சொன்னவரை விட்டுட்டாங்களாம்.. இதெல்லாம் மகன் மீதிருக்கும் பாசம் எனவும் சொல்றாங்க.. இதனால தந்தையையும் மகனையும் நம்பி வார்த்தையை விட்டுவிட வேண்டாம், எந்நேரத்திலும் சேர்ந்திருவாங்க.. அதன்பிறகு நாம் தான் பலிகடாவாக வேண்டியது வரும் என இப்போதே மூத்த நிர்வாகிகள் அடக்கி வாசிக்க தொடங்கிட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement