காதலனுடன் உல்லாசமாக இருந்ததால் மிரட்டி மகளை பலாத்காரம் செய்த தந்தை: இருவரும் கைது
பொள்ளாச்சி: காதலனுடன் உல்லாசமாக இருந்ததை மிரட்டி மகளை தந்தையே பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை, காதலன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன்(58) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குடும்பத்துடன் வசித்து கூலி வேலை பார்த்துள்ளார். இவரது 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிலையில், அவரது தாய் பொள்ளாச்சி அரசுமருத்துவமனையில் காட்டியுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் மாணவியிடம் விசாரித்த போது, பள்ளி செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்ற போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றிய கவியரசன்(21) என்பவருடன் பழகி காதலித்ததாகவும், அவர் ஆசைவார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது மாணவியின் தந்தைக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரும் மாணவியை மிரட்டி, மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தை மற்றும் காதலன் கவியரசன் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.