தந்தை பெரியாரின் பகுத்திறிவு சிந்தனையால் ஈர்க்கப்பட்ட கிராமம்: இறந்த மூதாட்டி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த பெண்கள்
கோவை: அன்னூர் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையால் ஈர்க்கப்பட்ட கோவை மாவட்டம் நல்லிசெட்டிப்பாளையம் கிராமத்தில், இறந்த மூதாட்டி உடலை இடுகாடு வரை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர். அன்னூர் வட்டம் நல்லிசெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள பெரியார் நகரில் 300க்கும் அதிகமான கிராமங்கள் வசித்து வருகின்றனர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளை பின்பற்றி வாழ்ந்துவரும் இப்பகுதி மக்கள் மூடநம்பிக்கை கருத்துக்களை உடைத்து வருகின்றனர். கிராமத்தில் அறிவியல் மனப்பான்மையை இளைய தலைமுறையிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உதவியுடன் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளனர்.
இந்த சூழலில் நஞ்சம்மாள் என்ற மூதாட்டி வயது முப்பு காரணமாக உயிரிழந்தார். வழக்கமாக ஆண்கள் மட்டுமே உடலை மயானத்தில் அடக்கம் செய்துவரும் நிலையில், ஆண், பெண் என்ற பாகுபாடு கற்பிக்கும் பழமைவாத கற்பிடங்களை உடைக்கும் பெரியார் சிந்தனை கொண்ட மூதாட்டி மருமகள், மகள்கள், பேத்திகள் தாங்களே உடலை இடுகாடு வரை தோளில் சுமந்து செல்ல முடிவு செய்தனர். பெண்கள் முடிவை கிராமத்தினர் வரவேற்றத்தை அடுத்து வீட்டில் இருந்து நஞ்சம்மாள் உடலை இடுகாடு வரை பெண்களே சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.