பரூக் அப்துல்லாவுக்கு எதிராக அமலாக்கதுறை தாக்கல் செய்த குற்ற பத்திரிகை ரத்து: காஷ்மீர் ஐகோர்ட் அதிரடி
Advertisement
ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது, ரூ.43.69 கோடி முறைகேடு நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டி விசாரித்தது. பின்னர் இதில் நடந்த சட்ட விரோத பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அப்துல்லா, ஹசன் அகமது மிர்சா,மீர் மன்சூர் கஸன்பர் உள்ளிட்ட சிலர் மீது அமலாக்கத்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் குமார்,‘‘தனிநபர்களுக்கு எதிராக எந்த ஒரு முன்னறிவிப்பு குற்றமும் செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
Advertisement