பரதாமியில் மாங்காய்களை தரையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்
11:38 AM Jun 16, 2025 IST
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆந்திர எல்லைப் பகுதியான பரதாமியில் மாங்காய்களை தரையில் கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டன் ஒன்றுக்கு ரூ.4000 மானியமாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.15,000 நிர்ணயித்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.