விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு என்ற தகவலில் உண்மை இல்லை: ஒன்றிய அரசு விளக்கம்
Advertisement
இந்த நிலையில், மேற்கூறிய தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை. நீருக்கு வரி விதிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. மத்திய நீர்வளத்துறை மந்திரி சி.ஆர் பாட்டில் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துவிட்டார். விவசாயிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம். வெளிப்படத்தன்மை கருதியும் தவறான தகவல் பரப்படுவதை தடுக்கவும் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement