விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ஒரு ரூபாய் தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள்: ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்
புதுடெல்லி: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சொற்ப தொகையை இழப்பீடாக தந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விவசாயிகள் ஒன்றிய அரசிடம் புகார் செய்தனர். இந்த புகார்கள் குறித்து, ஒன்றிய வேளாண்மைதுறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், சேதமடைந்த பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், 21 ரூபாய் இழப்பீடு தந்துள்ளது தெரியவந்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளுடன் விளையாடக் கூடாது. இப்படி நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சேதங்களை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், தேவையான மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.