விவசாயிகளிடையே அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு.. வெப்பமான சூழலில் பணியாற்றுவதே காரணம்: ஆய்வில் தகவல்!!
சென்னை: விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயலிழப்பு அதிகரித்து வருவதாக கிடைக்கப்படும் ஆய்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 5.13% சதவீதம் விவசாயிகளின் சிறுநீரக செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு இணைநோய்கள் எதுவும் இல்லை. நேரடியாக வெயிலில் வேலை செய்வதால் சிறுநீரக பாதிப்பு நெரித்து இருக்கலாம்.
2023 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சென்னை மருத்துவ கல்லூரியின் சிறுநீரகவியல் துறையினர் விவசாயிகளிடையே பல ஆய்வு நடத்தினர். மாநில உறுப்பு மாற்ற ஆணையத்தின் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அந்த குழுவினர், 125 கிராமங்களில் 3,350 விவசாய தொழிலாளர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில் 17 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டது. மீண்டும் மூன்று மாதங்களுக்கு பிறகு மறு பரிசோதனை நடத்திய போது அந்த விகிதம். 5.3 விழுக்காடாக குறைந்தது.
அவர்களுக்கு சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மரபணு பாதிப்பு என எவ்வித இணை நோய்களும் இல்லை. விவசாயிகள் நேரடியாக வெயிலில் பணியாற்றுவதால் சிறுநீரக செயல் திறன் பதித்து இருக்கலாம் என்றும் மருத்துவ குழு தெரிவித்து இருக்கிறது. நாள்தோறும் திறந்த வெளியில் அதிக வெப்பமான சூழலில் பல மணி நேரம் வேலை செய்யும் விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், இரும்பு கட்டட தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு உடலின் நீர் சத்து விரைவில் குறைந்து விடும்.