கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் அக்.31ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை: கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வழியாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியை அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்த தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட இறுதிப் பணிகள் நடந்து வருகிறது. இதனை முழுமையாக செயல்படுத்த, போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 30ம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement