ரசிகர்களால் என்னால் வெளியே செல்ல முடியவில்லை: நடிகர் அஜித் பேட்டி
சென்னை: நடிகர் அஜித் குமார் அளித்துள்ள பேட்டி வருமாறு: சினிமாவில் எனது ஆரம்பகாலத்தில் என் பெயர் பிரபலமாக இல்லை என்று சொல்லி மாற்றச் சொன்னார்கள். ஆனால், எனக்கு வேறெந்த பெயரும் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். பல்வேறு சவால்களை கடந்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் என்னால் சரியாக தமிழில் பேச முடியவில்லை. எனது திரைப்பயணத்தில் வந்த சவால்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்.
திரைப்படத்திலும், பந்தயத்திலும் ஒரே நெறிதான். அது சரியான குழுவை அமைக்க வேண்டும். புகழ் என்பது இரண்டு பக்க கூர்மையான வாள் போன்றது. அது வசதி மற்றும் நல்ல வாழ்க்கை முறையை தாராளமாக வாரி வழங்கும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கான முக்கியமான விஷயங்களை அது பறித்துவிடும்.
ரசிகர்கள் என்மீது பொழியும் அன்புக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ஆனால், அதே அன்பின் காரணமாக, குடும்பத்துடன் நான் வெளியே செல்ல முடியவில்லை. என் மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியவில்லை. சில நேரங்களில் என்னை கிளம்பச் சொல்லி பணிவாக கேட்டுக்கொண்ட சூழ்நிலை கூட உருவாகியுள்ளது. இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.