பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை
சென்னை: பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையை தலைமை இடமாக கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 20 மாநிலங்களில் சுகுணா சிக்கன் நிறுவனத்தில் 7 மணி நேரமாக சோதனை என்பது நடத்தப்பட்டது.
சுகுணா சிக்கன் என படும் இந்த நிறுவனம் கோழிப்பண்ணை தொழிலை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்திய முழுவதும் 20 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் அல்லது வங்கதேசம், கென்யா உள்ளிட்ட இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இவர்கள் நிறுவனம் விரைந்து அடைந்து இருக்கிறது.
முக்கியமாக கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் வருமானத்தையும். வருமான வரி தாக்கலையும் ஆய்வு செய்த பொழுது இரண்டும் பொருந்தாமல் இருந்த காரணத்தினால் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து வருமான வரி துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்க பட்ட காரணத்தினால் தமிழகத்தில் அவர்களுக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக ஈரோடு, உடுமலைப்பேட்டை, கோயம்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் சோதனை நடைபெற்றது. தலைமை அலுவலகத்திலும், இயக்குனர் அலுவலங்களிலும் மேலும் அவர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்று காலை முதல் 7 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் வெளியாகியது. ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு விதமான தொழில்களை தொடர்ந்து தொடங்கியிருக்கின்றனர். அதாவது டெல்ப்ரெஸ் என்கிற பெயரில் சில்லரை விற்பனை நிலையங்கள் தொடங்கி உள்ளனர்.
கறி கடைகள் பல இடங்களில் ஆரம்பித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிகுள் 1000 விற்பனை கடைகளை கொண்டுவர வேண்டும் என்ற இலக்குடன் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். அதேபோன்று மதர்ட்டிலைட் என்கிற பெயரில் சோயாபீன் எண்ணெய் உற்பத்தியும் நடத்தி வந்துள்ளனர் . ஆனால் இந்த தொழில்கள் அனைத்துமே அவர்களுக்கு முதலீடாக பெற்ற பணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்துள்ளது.
அதுக்கு உண்டான முதலீடுகள் எங்கே இருக்கிறது என்பதை குறித்து வருமான துறைக்கு கணக்கு காட்டவில்லை என்பது இந்த சோதனையில் அதிகாரிகள் கேட்ட விசாரணையிலும் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நஷ்டகணக்கு காட்டிருப்பதாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வர்த்தகம் எப்படி செய்து இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தியதில் விற்பனையை குறைத்து காட்டி வரியை குறைத்து செழித்திருப்பதும் கண்டு பிடிக்கபட்டது.
இதன் அடிப்படையில் தான் சோதனை என்பது நடத்தப்பட்டு பல்வேறு விதமான உண்மைகள் தெரியவந்தது. குறிப்பாக இவர்கள் வருமான வரித்துறையினர் சோதனையில் ரொக்கம், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் உள்ளிட்டவற்றை செய்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
வரிஏய்ப்பு செய்து அதுக்கு உண்டான பணத்தை வைத்து தான் இந்த சொத்துக்களையும் தங்கங்களையும் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சோதனை என்பது இன்று மட்டும் அல்லது நாளையும் தொடரும் எனவும் முழுமையான சோதனைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்கம் மற்றும் எவ்வளவு சொத்துக்களீல் இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதையும் அதே நேரத்தில் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்பதை அதிகாரபுரமாக வருமான வரித்துறை வெளியிடும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துருகின்றனர்.