பொய் சொல்லி கையெழுத்து வாங்கி மனுதாரர்களாக சேர்த்தது யார் என விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆஜரானார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பம், அதில் அவர்களுக்கு தெரியாமல் இரண்டு நபர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கி அவர்களையும் இந்த வழக்கில் மனுதாரராக சேர்த்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, அந்த 2 பேரிடம் பொய் சொல்லி யார் கையெழுத்து வாங்கினார்கள். அவர்களை யார் தவறாக வழிநடத்தியது என்று விசாரிக்க வேண்டும். சீமான் சிபிஐ விசாரிப்பது மாநில தன்னாட்சிக்கு எதிராக இருக்கிறது என்று ஏன் பதற்றப்படுகிறார் என தெரியவில்லை. எங்களை பொறுத்தவரை கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Advertisement
Advertisement