ரூ.68 கோடி போலி வங்கி உத்தரவாத வழக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஈடி குற்றப்பத்திரிக்கை
புதுடெல்லி: ஒடிசாவின் புவனேஷ்வரை சேர்ந்த ஷெல் நிறுவனமான பிஸ்வால் டிரேட்லிங்க் நிறுவனமானது போலி வங்கி உத்தரவாதங்களை வழங்குவதில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. டெல்லி காவல்துறையுடன் சேர்ந்து அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையில் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ரூ.68.2கோடி போலி வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்தது தெரியவந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் மற்றும் 10 நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
Advertisement
Advertisement