போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடி: பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
உதவி ஆணையர் அலுவலகம் ஒதுக்காததால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், மாநகராட்சியில் விசாரணை செய்தார். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விசாரித்தபோது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெங்கடேஷ் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும், தலைமறைவாக உள்ள லதா மற்றும் கௌரி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.