தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நியாயமான கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்ததால் எஸ்ஐஆர் புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவிப்பு

சென்னை: நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் எஸ்ஐஆர் புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், சி.குமார், அ.பூபதி, அண்ணா.குபேரன், எஸ்.ரவி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் வழங்கப்பட்ட அதிகமான பணி அழுத்தங்களை களைந்திடவும், உரிய கால அவகாசம் வழங்கிடவும் வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் எஸ்ஐஆர் பணிகள் முழுமையாக புறக்கணிப்பு செய்யப்பட்டது.

Advertisement

இதையடுத்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழகத்திற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் ஆகியோர் தற்போது தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் முகாம் பணியில் உள்ளதாகவும், இன்று சென்னை திரும்பியதும் இதுகுறித்து பேசி ஆணைகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பின், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Related News