100 கூட தேறாது...தோல்வி பயத்தால் மோடிக்கு தூக்கம் போச்சு...கே.பாலகிருஷ்ணன்
Advertisement
ஆனால் 100 இடங்களை கூட வெல்ல முடியாது என்பது தான் உண்மை. மோடிக்கு எதிராக அலை வீசுகிறது என ஒன்றிய உளவுத்துறை ரகசிய அறிக்கை தந்துள்ளது. இதனால் மோடி தூக்கம் தொலைந்து அலைகிறார். ஒரு மாநில முதலமைச்சரை மோடி அரசு கைது செய்கிறது. கேட்டால் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுத்தது என்கிறார்கள். ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் யார், யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என்பதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. எடப்பாடி பழனிசாமி, மோடியை உண்மையிலேயே எதிர்க்கிறாரா? சந்தேகமாக இருக்கிறது. மோடி மீண்டும் பிரதமரானால் எடப்பாடி அவருடன் சேர மாட்டாரா? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழிலில் கூட அதானி, அம்பானி வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.
Advertisement