டிரம்ப் நிர்வாகம் முடிவு: அமெரிக்காவில் எப் 1, ஜே 1 விசாதாரர்கள் தங்குவதற்கான கால கட்டுப்பாடு நிர்ணயம்
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் படிப்புக்காக, அமெரிக்கா வருவோருக்கான விசா மற்றும் குடியுரிமை விதிகளை கடுமையாக்கி வருகிறார். விசா பெறுவதில் உள்ள சிக்கலான விஷயங்களில் உதவுவதற்காக, அமெரிக்க அரசால் நடத்தப்பட்ட குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்தோர் சேவைகள் துறையையும் மூடினார்.
இந்நிலையில், அமெரிக்காவில் எப்1, ஜே1 விசாதாரர்கள் தங்குவதற்கு கால கட்டுப்பாடு நிர்ணயிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். எப் 1 விசாவில் உள்ள மாணவர்கள், ஜே 1 விசாதாரர்கள் இதுவரை காலவரையின்றி அமெரிக்காவில் தங்கி வந்தனர். தற்போது, அவர்களுக்கான கட்டுப்பாட்டை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், விசாவில் அமெரிக்கா செல்லும் ஊடகவியாளர்களுக்கும் கால கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது.