ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள்: தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் வீதியுலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 7வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி விழாவானது நடைபெற்றது. பஞ்ச ஆயுதங்களை கையிலேந்தியப்படி சூரிய பிரபை வாகனமாக கொண்டு மலையப்ப சுவாமி வலம்வந்தார்.
பல்வேறு வாகனங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் இந்த சுவாமி வீதிவிழாவானது நடைபெற்றது. நான்கு மாட வீதியில் இருபுரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமியின் வீதி விழாவின் போது கற்பூர ஆர்த்தி எடுத்து தற்பொழுது மனம் வேண்டி வருகின்றனர். இன்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா ஆனது நடைபெற உள்ளது.