ஏற்றுமதி துறையை பாதுகாக்க புதிய கொள்கை தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்தியா தனது ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் தந்து இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க வேண்டும். அமெரிக்காவின் 50% வரி நெருக்கடியில் இருந்து ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 28% பங்களிப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் துணிநூல் தொழிலாளர்களின் 65 சதவீதம் பெண் தொழிலாளர்கள். திருப்பூரே கடந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடி வெளிநாட்டுச் செலவாணியை ஈட்டியது. எனவே ஒன்றிய அரசு விரைந்து செயல்பட்டு புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துள்ளார்.
Advertisement
Advertisement