தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

Advertisement

திருவொற்றியூர்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள்-மாமன்ற உறுப்பினர்களின் பணிகள் மற்றும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் விதம், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாடுகள் போன்ற சென்னை மாநகராட்சியின் பணிகள் குறித்து முதுகலை சமூகவியல் படிக்கும் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், கவுன்சிலர்,அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை திருவொற்றியூர் 7வது வார்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் தலைமை வகித்தார். இதில் அதிநவீன முறையில் ஒளிப்பட கருவி மற்றும் கணினி மூலமும் சென்னை மாநகராட்சி பணிகள் குறித்தும் பொதுமக்களை மாமன்ற உறுப்பினர்களை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்தும் கே.கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாணவ - மாணவியருக்கு விளக்கினர்.

மேலும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், பாதாள சாக்கடை, சாலை வசதிகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு எப்படி உதவ முடியும் என விளக்கி கூறப்பட்டது. இதன்பின்னர் மக்களை நேரடியாக சந்தித்த மாணவர்கள் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.‘’இந்த கலந்தாய்வு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது. தங்களுடைய முதுகலை பாடத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது’ என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement