37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மேகத்தில் உரசியதால் திடீரென விமானம் 6,000 அடி கீழ்நோக்கி இறங்கியது. 37,000 அடியில் இருந்து சில நிமிடங்களில் 31,000 அடிக்கு குலுங்கியவாறு விமானம் இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தமான் கடற்பரப்புக்கு மேலே பறந்தபோது மேகக் கூட்டத்துக்குள் சிக்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.