‘பரிட்சைக்கு பயமேன்’ மாணவர்களுடன் மோடி ஜனவரியில் கலந்துரையாடல்: ஜன.11 வரை முன்பதிவு
புதுடெல்லி: பிரதமர் மோடியின், பரிட்சைக்கு பயமேன் என்ற நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “பிரதமர் மோடியின் பரிக்ஷா பே சர்ச்சா(பரிட்சைக்கு பயமேன்) என்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் 9வது பதிப்பை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மைகவ் தளத்தில் 2025 டிசம்பர் 1ம் தேதி முதல் 2026 ஜனவரி 11ம் தேதி வரை இணையதள போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து போட்டியில் கலந்து கொள்ளலாம். இதில் வெற்றி பெறும் அனைத்து பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களும் மைகவ் தளத்தில் பங்கேற்பு சான்றிதழ் பெற உள்ளனர்’என்று தெரிவித்தனர்.
Advertisement
Advertisement