தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தபால் வாக்குப்பதிவு துவங்கியது

Advertisement

ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்குகளை செலுத்தும் பணி இன்று துவங்கியது.ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கு திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,526 பேர் உள்ளனர். இவர்களில் 209 பேரும், மாற்றுத்திறன் வாக்காளர்கள் 47 பேரும் வீட்டிலிருந்தவாறே தங்களது வாக்குகளை தபால் மூலமாக செலுத்திட விருப்பம் தெரிவித்திருந்தனர். சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு இன்று காலையில் 4 குழுக்களாக பிரிந்து சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

இந்த 4 குழுவினரும் ஈரோடு, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள தபால் வாக்குகளைச் செலுத்தவுள்ள வாக்காளர்களிடம் வாக்குகளை பெறும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வாக்காளரின் அடையாளத்தை சரிபார்த்து, அதன் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, வாக்காளரின் கையொப்பத்தை பெற்று வாக்களிக்கும் முறை குறித்து விளக்கி, அஞ்சல் வாக்குச்சீட்டை வழங்கினர். தொடர்ந்து, அவர்கள் வாக்களித்த பின்னர், வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று தொடங்கி, 24, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் குழுவினர் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளை மேற்கொள்வார்கள்.

Advertisement