ஈரோடு: ஈரோட்டில் வாடகை கார் உரிமையாளர்கள் இணைந்து கூட்டுறவு சங்க கால் டாக்சியை தொடங்கி உள்ளனர். கார்பரேட் டாக்சிகளின் ஆதிக்கத்துக்கு மாற்றாக கால் டாக்சி உரிமையாளர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஈரோட்டைத் தொடர்ந்து சேலம், கடலூரில் இதே போன்று கூட்டுறவு சங்க கால் டாக்சி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்தனர். கூட்டுறவு சங்க கால் டாக்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என கோ ஆப் கால் டாக்சி சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.