ஈரோடு மாவட்டத்தில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக பெங்களூருவுக்கு செல்கிறது தனிப்படை..!!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக தனிப்படை பெங்களூரு செல்கிறது. ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தி அடியில் ஆந்திர மாநிலம் மேலூரை சேர்ந்த வெங்கேஷ், கீர்த்தனா தம்பதியினர் தங்களது 5வயது மகன் மற்றும் 1 அரை வயது பெண் குழந்தை வந்தனாவுடன் கடந்த 15ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் குழந்தை தூங்கி கொண்டிருந்த கொசுவலையை அறுத்துவிட்டு குழந்தையை கடத்தி சென்றனர். இது தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்தார்.
அப்போது ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படையில் 7 அமைக்கப்பட்டு இதே போல் குழந்தை கடத்தல் வழக்கில் 8 மாவட்டத்திலும் விசாரணை நடைபெற்றதாக தெரிவித்த நிலையில் ஒரு தனிப்படை திருநெல்வேலி சென்று விசாரணை நடத்தி வருவதாகவும், அதே போல் மற்ற தனிப்படை பெங்களூரு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சம்பவ அதிகாலை 12 மணி முதல் 1 மணிவரை அவ்வழியாக சென்ற வாகனங்களை ஆய்வு செய்து வருவதாகவும். மேலும் அப்பகுதியில் உள்ள 33 இடங்களில் உள்ள சிசிடி கேமராக்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.