தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எர்ணாகுளம்-பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: இந்தியா வேகமாக முன்னேறுவதாக பெருமிதம்

வாரணாசி: எர்ணாகுளம்-பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உள்கட்டமைப்பு மேம்பாட்டால் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்தில் இருந்து 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய புதிய வந்தே பாரத் ரயில்கள், பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், பெரோஸ்பூர்-டெல்லி மற்றும் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ளன.

Advertisement

இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில், பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் அவற்றின் உள்கட்டமைப்புதான். பெரிய முன்னேற்றத்தை அடைந்த ஒவ்வொரு நாட்டிலும், அதன் பின்னணியில் உள்ள உந்துசக்தி உள்கட்டமைப்பு மேம்பாடுதான். உள்கட்டமைப்பு என்பது வெறும் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அல்ல. இந்த கட்டமைப்புகள் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்டுகிறது. இவ்வளவு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாலும், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து விமானங்கள் வருவதாலும், இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் இப்போது வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இன்று, இந்தியாவும் வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்து வருகின்றன. வந்தே பாரத் என்பது இந்தியர்களால் இந்தியர்களுக்காக கட்டமைக்கப்பட்ட இந்தியர்களின் ரயில், இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார்கள். இந்த ரயில்கள் அதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். நான்கு புதிய ரயில்கள் சேர்க்கப்பட்டதன் மூலம், நாட்டில் 160க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன. நமது நாட்டில், புனித யாத்திரை பல நூற்றாண்டுகளாக தேசிய உணர்வின் ஊடகமாகக் கருதப்படுகிறது.

இந்தப் பயணங்கள் வெறும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்கான பாதைகள் மட்டுமல்ல, பல புனித யாத்திரைகள் உத்தரபிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களித்துள்ளது. மேலும் ஓட்டல் உரிமையாளர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் படகு ஓட்டுநர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கியுள்ளது. இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. வளர்ந்த காசியிலிருந்து வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க, ஏராளமான உட்கட்டமைப்பு திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

வாரணாசியில் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் பாடுபடுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு, மக்கள் தங்கள் நிலம் மற்றும் பண்ணைகளை விற்று, சிகிச்சைக்காக மும்பைக்கு பயணிப்பார்கள். இன்று, காசி மக்களின் இந்த கவலைகள் அனைத்தையும் போக்க எங்கள் அரசாங்கம் பாடுபட்டுள்ளது. புற்றுநோய்க்கான மகாமனா புற்றுநோய் மருத்துவமனை, கண் சிகிச்சைக்காக சங்கர நேத்ராலயா, பி.எச்.யூவில் உள்ள அதிநவீன அதிர்ச்சி மையம், பாண்டேபூரில் உள்ள சதாப்தி சிகிச்சைசாலையில் உள்ள பிரிவு மருத்துவமனை ஆகியவை காசி, பூர்வாஞ்சல் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளன. காசி இப்பகுதியின் சுகாதார தலைநகராக அறியப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முதல் வந்தே பாரத்

கேரளாவின் எர்ணாகுளம் - கர்நாடகாவின் பெங்களூரு இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் இன்று முதல் தனது சேவையை தொடங்குகிறது. இந்த ரயில் பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடையும். 583 கிமீ தொலைவை இந்த ரயில் 8 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் முதல் வந்தே பாரத் ரயிலாகும். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கேரளாவின் திருச்சூர், பாலக்காடு வழியாக, தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தை அடைந்து பெங்களூரு சென்றடைகிறது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களை இணைப்பதால், இந்த ரயில் வணிகம், கல்வி, சுற்றுலா, புனித யாத்திரை மற்றும் சுகாதாரப் பயணத்தை அதிகரிக்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கேரளாவில் தொடங்கப்படும் 3வது வந்தே பாரத் ரயில் இது.

* படுக்கை வசதி ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் ஜூனில் தயாராகும்

படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளான பராமரிப்பு மையம் ரூ.360 கோடி செலவில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் ஜூன் மாதம் தயாராகி விடும் என வடமேற்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* குழந்தைகளின் கவிதை பிரதமர் மோடி பாராட்டு

பனாரஸ் ரயில் நிலையத்திலும், வாரணாசி-கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் அங்கு கூடியிருந்த குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது குழந்தைகள் மோடியிடம் தாங்கள் எழுதிய கவிதைகளை வழங்கினர். இது குறித்து பிரதமர் மோடி பேசும் போது, ‘‘வாரணாசியின் எம்பியாக, எனது காசியில் இவ்வளவு திறமையான குழந்தைகள் இருப்பதைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். குழந்தைகளில் பல இளம் கவிஞர்களை நான் சந்தித்தேன். அவர்களில் சிறந்த 10 பேர் நாடு முழுவதும் கவிதை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இன்று எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் இனிமையான அனுபவம் கிடைத்தது. இந்தக் குழந்தைகளை நான் மனதார வாழ்த்துகிறேன்’’ என்றார்.

Advertisement

Related News