இபிஎஸ் பிரசாரத்திற்கு சென்ற வேன் மோதி ஒருவர் பரிதாப பலி
விருதுநகர்: சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியை சேர்ந்தவர் முருகன் (47). போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர். நேற்று பைக்கில் ராஜபாளையம் அருகே உள்ள கோடாங்கிபட்டிக்கு புறப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமலிங்காபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன், டூவீலர் மீது மோதி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் வந்த ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். வேனில் வந்தவர்கள் சாத்தூரில் நடந்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என தெரிய வந்தது.