எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் விழுந்து 9 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்; எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் பிரம்மாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 30 அடி உயரத்தில் 10க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தபோது விபத்து ஏற்பட்டது. கட்டுமானப் பணியின்போது முகப்பு சரிந்து விழுந்து பெரும் விபத்து விபத்துக்குள்ளானது.
இதில் 9 புலம்பெயர் தொழிலாளர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.