தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், "தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்.ஆர்.இளங்கோ. என்.ஆர்.இளங்கோவின் வாதத் திறமையை பார்த்துதான் கலைஞர் அவருக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பு தந்தார். வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பீகார் போன்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது, அதை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவர்தான் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.

Advertisement

பீகாரில் செயல்படுத்தப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். அங்கு நடைபெறவுள்ள ஒரு முக்கியமான நிகழ்வை இப்போது அறிவிக்க விரும்புகிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருப்படம் திறக்கப்பட உள்ளது. பெரியார் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு பெருமை.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை நான் திறந்துவைக்க உள்ளேன். அதை எண்ணிப் பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன். திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சென்னை எனது வெளிநாட்டு பயண திட்டம் குறித்து நாளை செய்தியாளர்களிடம் விளக்குகிறேன். "இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News