இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி..!!
இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் மற்ற 4 போட்டிகளில் இந்தியா - இங்கிலாந்து தலா 2 -ல் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும் 2வது இன்னிங்ஸில் 396 ரன்களும் எடுத்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் சதம் அடித்த நிலையிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 247 ரன்களும், 2வது இன்னிங்சில் 367 ரன்களும் எடுத்தது.