இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி ஓட்டலை சூறையாடிய கொள்ளை கும்பல்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரின் ஓட்டலை கொள்ளைக்கும்பல் சூறையாடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அங்கித் வகேலா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இங்கு ஓட்டல் திறந்தார். இவரது உணவகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் சென்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோர் அங்கு சென்று சாப்பிட்டனர். இதனால் ஓட்டல் பிரபலம் அடைந்தது. இந்த நிலையில் அவரது ஓட்டலில் புகுந்த கொள்ளை கும்பல் ஓட்டலை சூறையாடியதுடன், கொள்ளையடித்தும் சென்றுள்ளது. இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.