இங்கிலாந்துடன் 2வது ஓடிஐ இந்திய மகளிர் தடுமாற்றம்
Advertisement
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை பிரதிகா ராவல், 3 ரன்னிலும், பின் வந்த ஹர்லின் தியோல் 16, கேப்டன் ஹர்மன்பிரித் 7, ஜெமிமா ரோட்ரிகஸ் 3, ரிச்சா கோஷ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 29 ஓவர் முடிவில் இந்தியா, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்திருந்தது. தீப்தி சர்மா 30 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லஸ்டோன் 3, எம் அர்லாட், லின்ஸே ஸ்மித் தலா 2, சார்லி டீன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
Advertisement