பொறியியல் மாணவர் சேர்க்கை துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தேதி துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement