தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

50 சென்ட் நிலத்தில் பீர்க்கன்காய் சாகுபடி! ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரின் கலக்கல் விவசாயம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கழினிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். எம்இ ஏரோநாட்டிக்கல் படித்த இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரியில் இருந்த ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவு நீக்கப்பட்டதால் இவருக்கு பணி கைவிட்டுப்போகும் சூழல் உருவானது. ஆனால் இவர் கலங்கவில்லை. நம்பிக்கையோடு தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். இதில் முதன்மையாக 50 சென்ட் நிலத்தில் பீர்க்கங்காய் சாகுபடியைத் தொடங்கினார். நல்ல லாபம் கிடைத்ததால் கடந்த 5 ஆண்டுகளாக பீர்க்கன்காய் சாகுபடியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். இதில் முறையான லாபத்தையும் எடுத்து வருகிறார். இதுகுறித்து அறிந்து அவரை சந்தித்துப் பேசினோம்.

Advertisement

`` கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்இ ஏரோநாட்டிக்கல் படித்தேன். படித்து முடித்தவுடன் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றினேன். கொரோனா காலத்தில் பணியை விட வேண்டிய சூழல். இதனால் நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. எனக்கு சிறுவயதில் இருந்தே விவசாயம் மீது ஈடுபாடு உண்டு. இதையே நாம் லாபகரமான தொழிலாக மாற்றலாமே என எண்ணினேன். என்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் பீர்க்கங்காய், பப்பாளி, நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்தேன். இதில் எனக்கு அதிக வருமானம் ஈட்டும் பயிராக பீர்க்கங்காய் இருந்து வருகிறது. அதாவது, 50 சென்ட் நிலத்தில் பீர்க்கன்காயைப் பயிரிட்டேன்.

பொதுவாக காய்கறி சாகுபடிக்கு அமைக்கும் பந்தலை கல் தூண்கள், கான்கிரீட் தூண்கள், இலுப்பை மரம், மூங்கில் மரம், ஒதியமரம் போன்றவை மூலம் அமைக்கலாம். அதில் காய்கறி கொடிகளைப் படர விடலாம். பந்தல் அமைப்பதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. கல் தூண்களை நிறுத்தி அதன்மேல் கம்பிகளை இழுத்துக் கட்டி பந்தலாக்குவது இருப்பதிலேயே அதிக செலவு பிடிக்கும் விஷயம். ஆனால் மிக நீண்ட காலம் உழைக்கும். உற்பத்தித் திறனும் அதிக எடையும் கூடிய காய்கறி சாகுபடிக்கு இந்த வகை பந்தல் ஏற்றது. ஆனால் இதற்கான ஆரம்பக் கட்ட முதலீடு மிகவும் அதிகம். சிலர் இந்த பந்தலின் செலவினை குறைக்கும் பொருட்டு கல்தூண்களுக்கு மாற்றாக ஒதிய மரம், கல் மூங்கில் குச்சிகள், கான்கிரீட் தூண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். கம்பிகள் விலை கூடுதலாக இருப்பதால் நைலான் கயறு அல்லது நைலான் வலை போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றனர். முதலீட்டு வசதிக்கு ஏற்ப அவரவர் தேவைக்கு ஏற்ப பந்தல் அமைக்கலாம். நான் 50 சென்ட் நிலத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தேன்’’ எனக்கூறிய இளங்கோவன் பீர்க்கன்காய் சாகுபடி குறித்து விளக்கினார்.

``பீர்க்கன்காய் சாகுபடிக்கு குறைந்தது 4 சால் உழவு செய்து நிலத்தை கட்டிகளின்றி நன்கு புழுதியாக்க வேண்டும். நிலத்தை கிழக்கு மேற்காக 6 அடி இடைவெளியில் தூண்கள் நட்டு பந்தல் அமைத்தேன். அதில் 5 அடி இடைவெளியில் விதைகளை ஊன்றினேன். கூடாரம் அமைக்க உள்ள 6 அடி இடைவெளியில் உள்ள மண்ணை வழித்து இழுத்து 5 அடி இடைவெளியில் இரண்டுபுறமும் நீளமாக கரை போன்று அமைக்க வேண்டும். இதற்கு இடையில் 2 அடியில் வாய்க்கால் கிடைப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும்.இடைமட்ட பந்தல் அமைத்தால் கிடைக்கின்ற பரப்பளவை விட அதே அளவு நிலத்தில் பந்தல் அமைத்தால் கொடி படருவதற்கான பரப்பளவு அதிகம் கிடைக்கும். தரையிலிருந்தே கொடி படருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பந்தலில் கொடியை தூக்கிகட்டும் வேலையும், தளிர் கிள்ளும் வேலையுமில்லை. காய் பறிக்கும் வேலை மிக எளிது. காய்களின் தோற்றமும் ஒன்று போல இருக்கும். காய்கள் வளையாமல் நேராக இருக்கும். காய்கள் தொங்குவதால் சரியான பக்குவத்தில் காய்களை பறிக்கலாம். பூச்சி மருந்து தெளிப்பதற்கும், உரம் போடுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதும் எளிது. 10 அடிக்கு ஒரு வாய்க்கால் இருப்பதால் தண்ணீருக்கான தேவையும் மிகக் குறைவு.

குறைந்த பரப்பளவு நிலம் மட்டுமே தண்ணீர் பாய்வதால் களைகள் முளைப்பதும் குறைவு. கொடிகளின் மீது சூரிய ஒளி படுகின்ற பரப்பளவு அதிகமிருப்பதால் ஒளிச்சேர்க்கை அதிக அளவில் நடக்கும்.பீர்க்கன்காய் சாகுபடி செய்ய அரை ஏக்கருக்கு 400 கிராம் அளவிற்கு விதை தேவைப்படுகிறது. பீர்க்கனில் வீரிய விதைகளும் கிடைக்கின்றன. மணலும், மண்ணும் கலந்த வளமான நிலத்தில் நன்கு வளரும் பீர்க்கனுக்கு மிதமான வெப்பநிலை மிகவும் ஏற்றது. 10 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிகொல்லி மருந்து தெளிக்க வேண்டும். பழ ஈ தாக்குதல் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் இனக் கவர்ச்சி பொறி பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இது 3 மாத பயிர் என்பதால் ஆண்டுக்கு 3 முறை சாகுபடி செய்யலாம். 2 நாட்களுக்கு ஒருமுறை பீர்க்கன் காய் பறிக்கும்போது குறைந்தது 100 கிலோ முதல் ரூ.150 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு சாகுபடிக்கு முதலீடு போக ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. 1 கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை வேலூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப் படுகிறது. மற்ற பயிர் சாகுபடியை விட பீர்க்கன்காய் நல்ல பணப்பயிராக விளங்குகிறது. குறைந்த நிலத்தில் அதிக லாபம் கிடைக்க இது ஒரு சிறந்த பயிர்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

இளங்கோவன் - 86672 35545

Advertisement

Related News