5 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் புதிய மதுபான கொள்கையால் அரசு கருவூலத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை விசாரிக்க கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஆந்திர மாநில அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிந்தது.
Advertisement
விசாரணையின் ஒரு பகுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஐதராபாத், பெங்களூரு, சென்னை, தஞ்சாவூர், சூரத், ராய்ப்பூர், டெல்லி மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் அமலாக்க இயக்குநரகம் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் ரூ.38 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கோடி மதிப்புள்ள பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பியதைக் குறிக்கும்ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement