அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு; விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு சிபிஐ கோர்ட் விலக்கு
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் உள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று வாதிட்டார். பொன்முடி தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.