தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என்கவுன்டர் தொடர்பாக யார் மீது சந்தேகம் என்று கூறினால் விசாரிக்க தயார்: அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை: என்கவுன்டர் தொடர்பாக அண்ணாமலை ஜோதிடம் பார்த்து யார் மீது சந்தேகம் என்று கூறினால் தமிழ்நாடு அரசு அவர்களை விசாரிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குற்றவாளிகள் தப்பித்து செல்லும் பொழுது சுட்டு தான் பிடிக்க முடியும். ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது.
Advertisement

எப்போதுமே எதிர்க்கட்சியினருக்கு யூகமான சந்தேகமும், புதுமையான சந்தேகமும் வரும் தான். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரை குற்றவாளிகளிடமிருந்து வீடியோ ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இதில் உண்மை குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளில் திருவேங்கடம் தப்பி செல்லும் பொழுது என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை ஜோதிடம் பார்த்து விட்டு வந்து யார் மீது சந்தேகம் இருக்கிறது என்று கூறினால் அவர்களையும் விசாரிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

எங்களை பொறுத்தவரை மாயாவதி கட்சி எங்களுக்கு வேண்டிய கட்சிதான். ஆம்ஸ்ட்ராங் எங்களுக்கு எதிரி கிடையாது. எங்களுக்கு தோழமை தான். காவிரி விவகாரத்தில் தற்போது கர்நாடகாவில் மழை நன்றாக பெய்துள்ளதால் அவர்களுக்கு தண்ணீர் தருவதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அதை தீர்ப்பாயத்தில் தெரிவித்து உரிய நீரை பெறுவோம்.

இரண்டு மாநிலத்திற்கு இடையே பிரச்னை வரும் பொழுது அதில் ஒன்றிய அரசுதான் தலையிட்டு ஒரு முடிவை காண முடியும். நாங்கள் நேராக பேசுவதற்கு இது பங்காளி பிரச்னையோ, சொத்து பிரச்னையோ அல்ல. தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்று தர வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என பாமக எதிர்பார்த்தது. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement